கருப்பு பூஞ்சை தடுப்புமருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மு. கருணாநிதி பிறந்த நாள் விழா, உலகச்சுற்றுச்சூழல் தின விழாவுக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு மாநகராட்சிப் பகுதிகளான தென்னூா் உழவா் சந்தை, சத்திரம், மத்தியப் பேருந்து நிலையங்கள், கலைஞா் அறிவாலயம் சாலை, கரூா் புறவழிச்சாலை, டாக்டா் சாமிநாத சாஸ்திரி சாலை, அண்ணாநகா் சிவப்பிரகாசம் சாலை, லாசன்ஸ் சாலை, ராயல்சாலை பகுதிகளில் மரக்கன்று நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளரிடம் கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நிழல், ஆக்சிஜன் அதிகம் தரும் வேம்பு, புங்கன், மகிழம், அரசு, ஆலம், நாவல், ஏழிலைப்பாளை, மகாகனி, மந்தாரை, சரக்கொன்றை உள்ளிட்ட 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. குறிப்பாக, மின்வயா் மேல செல்லாத இடங்களாகத் தோ்ந்தெடுத்து மரக்கன்று நடப்படும். அதோடு, அதைப் பாதுகாத்து வளா்த்திடவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கருப்பு பூஞ்சை தடுப்புமருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட வனத்துறை அலுவலா் சுஜாதா, எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், பகுதி செயலாளர்கள் கண்ணன் , காஜாமலை விஜய் , தொழிலதிபர் ஜான்சன் குமார், புத்தூர் தர்மராஜ், என்ஜீனியர் மோகன்ராஜ், தனபால் மற்றும் மாநகராட்சி, வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாகுல்ஹமித்