கம்பம் அருகே நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.
ஜூலை.28-
கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் இன்று தமிழகம் முழுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி கம்பம் அருகேயுள்ள நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கம்பம் ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து , பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மேகதாது அணைப் பிரச்சனை மற்றும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் கம்பம் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை துணை செயலாளர் செல்வேந்திரன், ஊராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி ஆசீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கத்துரை, ஊராட்சி வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சுதாகர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். குமரேஷ்