கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சாமி ரவி மீது குண்டர் சட்டத்தில் கைது மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவு
திருச்சி,
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சாமி ரவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி-கரூர் பைபாஸ்சாலை பெட்டவாய்த்தலை அருகே கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, காரில் கொண்டு வந்த ரூ.2 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சாமி ரவி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிரவி உள்ளிட்ட கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்சி கே.சாத்தனூரை சேர்ந்த கருப்பையா (வயது 41) என்பவரிடம் கடந்த மாதம் 17-ந் தேதி காலை சாமிரவி கத்தியை காட்டி மிரட்டி ரூ.5,500-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்தும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து சாமிரவியை தேடி வந்தனர். இதற்கிடையே பெட்டவாய்த்தலை போலீசார் சாமிரவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 65 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். அதன்பிறகு திருச்சி கே.கே.நகர் போலீசார் சாமிரவியை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாமிரவி மீது ஏற்கனவே கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கும், தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளும், கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும், காரைக்கால் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது. விசாரணையில் சாமிரவி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமி ரவியிடம் அதற்கான உத்தரவை போலீஸாா் வியாழக்கிழமை மாலை உத்தரவு நகல் வழங்கப்பட்டது. கே.எம்.ஷாகுல்ஹமித்