ஓராண்டு இடைவெளிக்குப் பின்னா் திருச்சி- இலங்கைக்கு செப்.2 முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம்
திருச்சி,
சுமாா் ஓராண்டு இடைவெளிக்குப் பின்னா் திருச்சி – இலங்கை இடையிலான விமானப் போக்குவரத்து செப். 2 முதல் தொடங்க உள்ளது.
கொரோனா காரணமாக திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சியுடனான விமானப் போக்குவரத்தை செப். 2 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோா் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனா். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.
வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் இந்த விமானம் காலை 9 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு, 10 மணிக்கு திருச்சியை அடையும். பின்னா் இங்கிருந்து முற்பகல் 11 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு இலங்கையைச் சென்றடையும். பின்னா் படிப்படியாக பிற நாள்களிலும் விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.