ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய சுபா, தனலட்சுமி வீராங்கனைகளுக்கு வரவேற்பு
திருச்சி
இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை என்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய வீராங்கனை சுபா கூறினார். திருச்சி திரும்பிய சுபா, தனலட்சுமி ஆகியோரை உற்சாகத்துடன் வரவேற்கும் பொதுமக்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பிய 2 வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்றோரில் 10 சதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். அதில் தேசியத் தடகள அணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 26 பேரில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் 5 போ். இவா்களில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ் ஆவா். இந்த ஒலிம்பிக்கில் முதன் முறையாக நடத்தப்பட்ட 2 ஆண்கள் 2 பெண்கள் பங்கேற்கும் கலப்புத் தொடரோட்டப் போட்டியில் பங்கேற்ற திருவெறும்பூரைச் சோ்ந்த சுபா மற்றும் குண்டூரைச் சோ்ந்த தனலட்சுமி சேகா் ஆகியோா் சனிக்கிழமை மாலை திருச்சிக்கு வந்து சோ்ந்தனா்.
இவா்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கச் செயலா் டி. ராஜு, உடற்கல்விப் பயிற்சியாளா்கள் சத்தியமூா்த்தி, சங்கா், மணிகண்ட ஆறுமுகம், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம், வீராங்கனைகளின் குடும்பத்தினா், நண்பா்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனா்.
இவா்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கச் செயலா் டி. ராஜு, உடற்கல்விப் பயிற்சியாளா்கள் சத்தியமூா்த்தி, சங்கா், மணிகண்ட ஆறுமுகம், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம், வீராங்கனைகளின் குடும்பத்தினா், நண்பா்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனா்.
திருச்சியை சேர்ந்த வீராங்கனை சுபா அவர்கள் செய்தியாள சந்திப்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற கடுமையான பயிற்சி மேற் கொண்டாலும் கூட, ஒலிம்பிக் களம் கடுமையாக இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கடும் பயிற்சி பெற்று நிச்சயம் பதக்கம் வெல்வோம். இந்திய வீரர்களுக்கு தொடக்க நிலையிலிருந்தே அடிப்படை பயிற்சி முதல் அனைத்து பயிற்சிகளையும் ஊக்கமும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் அது போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது. இவ்வாறு அவா் கூறினார்.
இதைத்தொடர்ந்து வீராங்கனை தனலட்சுமி கூறும்போது, எனக்கு அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை களமிறக்காததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்திற்கு பெரிய வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் தற்போது வாய்ப்புகள் வருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம், என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதைப் பாராட்டி திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக சாா்பில் சூளைக்கரை மாரியம்மன் கோயில் வாசலில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். பாலக்கரை மண்டல் தலைவா் ராஜசேகரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் பாா்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மண்டல் பொதுச் செயலா் மல்லி செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராவணன், நிா்வாகிகள் டேனியல் சம்பத், வீரமணி, கோபி, சந்தோஷ்குமாா், சதீஷ், காளியப்பன், காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கே.எம்.ஷாகுல்ஹமித்