ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
முதுகுளத்தூர் : செப்: 29
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் போஷன் அபியான் திட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் பிரதான பயனாளிகளான கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெறும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா வளர்ச்சித்துறை மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு பிரவீன் குமார் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி ஜெயந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார், சிறப்பு விருந்தினராக மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி ரகுமத் நிஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( சத்துணவு) திருமதி லீலா ,வட்டார மருத்துவ அலுவலர் எபினேசர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு தங்கபாண்டியன்,பாண்டி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கர்ப்பிணிப்பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சமுதாய வளைகாப்பு, ஐந்து வகை சாதமும்,சீமந்தம் செய்யப்பட்டது.

ஆரோக்கியமான உணவுகள் பற்றியும், கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானிய வகைகள் பற்றிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டது,மாவட்ட திட்ட உதவியாளர் திருமதி சாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர், மாவட்ட புள்ளியல் ஆய்வாளர் மாணிக்கம்,அனைத்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராகிலபானு, வட்டார திட்ட உதவியாளர் பத்மபிரியா, அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ராமநாதபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி கலா நன்றி உரை கூறினார். கா.வினோத்குமார் முதுகுளத்தூர்