எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடக்கு தொகுதியான தொண்டியில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி
தொண்டி, ஆக.15 –
இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடக்கு தொகுதியான தொண்டியில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நகர் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில்நகர் துணை தலைவர் பாதுஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் சமூக நீதி
பாதுகாப்பு அமைப்பின் மாவட்ட தலைவர் வாசு ஜெயந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த சுதந்திர தின விழாவில் சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், திருவாடானை வடக்குக் தொகுதி தலைவர் சலாமத் அலி, தொண்டி கிழக்கு கிளை தலைவர் யூசுப்,தொண்டி மேற்கு கிளை செயலாளர் உசேன், மேற்கு கிளை பொருளாளர் அஸ்பர், நகர் செயற்குழு உறுப்பினர் அப்ரீத் மற்றும் தொண்டி நகர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
முடிவில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான் நன்றி கூறினார். முன்னதாக நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலை அருகே எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தேசிய கொடியேற்றினர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்