எஸ்.டி.பி.ஐ.கட்சியின் திருவா
திருவாடானை, செப்.12-
இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் திருவா
செயலாளர் கலபத்தை சகுபர் சாதிக், தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வெள்ளையபுரம் கிளை தலைவர் சபியுதீன், பாசிப்பட்டினம் துணை தலைவர் ராவுத்தர், செயலாளர் அஜிஸ், ஆர்.எஸ்.மங்களம் நகர் தலைவர் அபுபக்கர் சித்தீக், நகர் செயலாளர் சரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், மாவட்ட செயலாளர் அபுல் கலாம் ஆசாத்திற்கு தொகுதி மற்றும் நகர், கிளைகள் சார்பாக பொன்னாடை போர்த்தியும் புத்தகம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் ரியாஸ் கான் கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சியின் நிர்வாகிகள் திறம்பட செயலாற்றுவது பற்றியும் சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் தொண்டி மற்றும் ஆர்.எஸ்.மங்களம்பேருராட்சி தேர்தலில் திறம்பட செயல்பட்டுவெற்றி பெறுவது,
மழைக்காலம் வருவதை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து கிளைகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார்தல், கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் செய்ய அறிவுறுத்துவது, தொண்டி பகுதியில் உள்ள குடிநீர் கீழ்நிலை தொட்டியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டியாக தர உயர்த்த நடவடிக்கை எடுக்க பேருராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும் நம்புதாளையில் தொடர்ந்து நீடிக்கும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி ஒன்றிய பெருந்தலைவரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஊரக பகுதிகளில் தெருச்சாலைகளை இல்லாத பகுதிகளில் சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுப்பது என வளர்ச்சி சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் திருவாடனை வடக்கு தொகுதியின் பொருளாளர் அப்துல் மஜீத் நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்