தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக பதவி ஏற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துர் ரஹ்மானுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து
கொழும்பு,
தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக வஃக்பு வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், பதவியேற்றிருப்பது பெரிதும் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக முன்னாள் இந்திய லோக் சபா பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது : தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக வஃக்பு வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் பதவியேற்றிருப்பது பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும், அத்துடன் மர்ஹும் சிராஜூல் ஆ.கா.அ. மில்லத் அப்துல் சமது அவர்களின் புதல்வியும், நாடறிந்த மேடைப் பேச்சாளரும்,எழுத்தாளரும், சிறந்த சமூக சேவையாளருமான பாத்திமா முஸப்பர் மீண்டும் தமிழக அரசு வக்ஃப் வாரியத்திற்கு தெரிவு செய்யப்பட்டி ருப்பது குறித்தும், இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வக்ஃப் வாரியத்திற்கு நியமிப்பதற்கு இவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விதந்துரைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு வேலூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த நண்பர் அப்துல் ரஹ்மான், தாம் அந்த பதவியை வகித்த காலத்தில் அகில இந்திய அளவில் சிறந்த உறுப்பினருக்கான 6ஆவது இடத்தையும் தமிழக மட்டத்தில் 5ஆவது இடத்தையும் உயர் விருதாகப் பெற்றிருந்ததும் குறிப்பிட்டு கூறத்தக்கது என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்திலும், கணனித் துறையிலும் உயர் தகைமை பெற்ற அப்துல் ரஹ்மான் துபாய் நாட்டில் இஸ்லாமிய வங்கித் துறையில் முக்கிய பதவிகளை வகித் துள்ளதோடு, பிரபல “மணிச் சுடர் ” நாளிதழ் மற்றும் “பிறை மேடை” இதழ் ஆகியவற்றின் வளர்ச்சியில் தம்மை பெரிதும் ஈடுபடுத்தியுள்ள தலை சிறந்த ஊடகவியலாளருமாவார். இறைவன் அருளால் இத்தகையோரின் ஆளுமை மிக்க பங்குபற்றுதலுடனும், வழிகாட்டுதல்களுடனும் தமிழக அரசு வக்ஃப் வாரியம் திறன்பட செயற்படும் எனவும் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கே.எம்.ஷாகுல்ஹமித்