ஊரடங்கில் உதவும் தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கம் – சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
இராமநாதபுரம், ஜுன்,9
மாவட்டத்தில் தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் ஊரடங்கில் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பில் காவல் துறை உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர், கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கி வருகின்றனர். மேலும் ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தினசரி உணவு வழங்குவதுடன் இராமநாதபுரம் அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் எம்.பாலமுருகன், மாநில துணைத் தலைவர் என்.ராமகிருஷ்ணன்,மாநில செயற்குழு இணைச்செயலாளர் ஐயப்பன், மாவட்ட துணைத்தலைவர் பேராவூர் முனியசாமி, மாவட்ட செயலாளர் உச்சிபுளி முருகேசன், பொருளாளர் பட்டினம்காத்தான் குமரேசன்,
கௌரவத் தலைவர் நாகாச்சி முனியசாமி, இணைத் தலைவர் செம்படையார் குளம் சிவக்குமார்,இணைச்செயலாளர் சிக்கல் நைனா முகமது, கொள்கை பரப்புச் செயலாளர் கமுதிஅய்யனார், செய்தித்தொடர்பாளர் பிரப்பன்வலசை இளங்கோ, மண்டபம் ஒன்றிய தலைவர் சரவணன் ,திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் முருகேசன்,கடலாடி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரன், நைனார் கோவில் ஒன்றிய தலைவர் சௌந்திர பாண்டியன், உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
எம்.சோமசுந்தரம்