உலக சுகாதார மேம்பாட்டுக்கான தீா்வுகளைக் கண்டுபிடிக்க கொரோனா தொற்று பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது திருச்சி என்.ஐ.டி. 58 வது நிறுவன விழாவில் இந்திய அறிவியல் கழக இயக்குநா் கோவிந்தன் ரங்கராஜன் பேச்சு
திருச்சி
உலக சுகாதார மேம்பாட்டுக்கான தீா்வுகளைக் கண்டுபிடிக்க கொரோனா தொற்று பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்று திருச்சி என்.ஐ.டி. 58 வது நிறுவன விழாவில் இந்திய அறிவியல் கழக இயக்குநா் கோவிந்தன் ரங்கராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் என்.ஐ.டி. 58வது நிறுவன தின விழாவை நடைபெற்றது. விழாவிற்கு என்.ஐ.டி. இயக்குனர் டா. மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்தார். அனைவரையுப் மாணவ மன்றத்தின் தலைவர் கமலேஷ் கண்ணா வரவேற்று பேசினார். விழாவில் கல்வியின் டீன், ரடா. ராமகல்யாண் அய்யாகரி பேசுகையில், நிறுவனத்தின் அனைத்து துறைகளின் ஆசிரியர்கள் மற்றும் மானணவ மாணவிகளின் சாதனைகளை பற்றி விளக்கினார். பிரதமரின் ஆராய்ச்சி நிதியுதவியை பெற்ற 13 ஆராய்ச்சி மாணவர்களை பாராட்டி, கடந்த ஆண்டில் நிறுவனத்தில் காப்புரிமை பதிவுகள் அதிகரித்து இருக்கிறது என்றார். தொடர்ந்து, நிறுவனத்தின் துறைகள் பெற்ற 8.5 கோடி மதிப்பிற்கு மேலான பல்வேறு ஆராய்ச்சி நிதிகள் மற்றும் ஆராய்ச்சி பதிப்புகள் பற்றின விவரங்களை தெரிவித்தார்.
கருவி மற்றும் கட்டுபாடு பொறியியல் துறையின் மானவர்கள் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான்” போட்டியை வென்றனர் என்பதை கூறி, நிறுவனத்தி பல்வேறு கலாச்சார மற்றும் தொழில்நுட்ப விழாகளில் பங்கேற்ற பிரபலர்களை பற்றி குறிப்பிட்டார். மேலும் நிறுவனத்தின் பசுமையை மேம்படுத்த ‘மியாவகி’ காடு வளர்க்கப்படுகிறது இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூருவில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் விருந்தினர் ஆன்லைன் வழியாக உரையாற்றினார். அவர் தன் உரையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கொரோனா காலங்களில் பல சவால்களை நாம் மேற்கொண்ட சாதனைகள் குறித்து விளக்கினார். இதனால் அவர்கள் பலருக்கு மனதளவில் வேதனை ஏற்பட்டது. இந்த வேதனையை போக்குவதற்கு, ஊரடங்கை மாணவர்கள் வீட்டில் தன் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உலக அளவில் சுகாதார மேம்பாட்டுக்காக தீர்வுகளை கண்டுபிடிக்க ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறினார். குறிப்பாக, உலகில் சராசரியாக 600 கோடி மக்களுக்கு தரம் மிகுந்த சுகாதார சேவைகள் பெற தேவையான நிதியும் இல்லை, தவிர நிதி இருந்தாலும் பல இடங்களில் வசதிகள் இல்லை என்று கூறி, இந்த சவால்களுக்கு தீர்ப்பை தேடி ஆராய்ச்சியில் ஈடுப்பாடு கேட்டு கொண்டார் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில்-பல்வேறு துறைகளின் அதிக மதிப்பெண்கள் பெற்ற முறையில் பல இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விருதுகள் பெற்றன. இறுதி ஆண்டு படிப்பை முடித்த சிறந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணை உட்பட 29 விருதுகள் வழங்கபட்டன. கூடுதலாக, 31 தலைப்புகளில் மாணவ
மாணவிகள் நற்கொடைகள் பெற்றன. பல ஆசிரியர்களும் அவர்களின் ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் நிறுவனத்தின் மேம்பட்டுக்காக அளித்த செயல்பாடுகளுக்கு அங்கீக்காரமாக ‘சிறந்த ஆசிரியர்’ விருது பெற்றனர். உலோக பொறியியல் துறையும் இயற்பியல் துறையும் சிறந்த துறை விருதை பெற்றன. 2020-21 மாணவ மன்றத்தின் துனை தலைவரான பாதிமா மாஹா, நடப்பு 2021-22 கல்வியாண்டின் புதிய மாணவ மன்றத்தை அறிமுகபடுத்திய பின் நன்றி உரையாற்றினார். கே.எம். ஷாகுல்ஹமித்