உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி சாலவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாக்கம், பழவேரி, சாத்தனஞ்சேரி, பினாயூர், இடம் மச்சி, உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராலமானோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தண்டரை அனல் எஸ்.விஜயன் தலைமையில் போந்தூர் பி.எஸ்.பாஸ்கர் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் அன்னக்கிளி மோகன் காந்தி, படப்பை சேட்டு ஏ தனசேகரன், மணிமங்களம் விஜி, சாலவாக்கம் இளையராஜா, பாலேஸ்வரம் சுபாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செய்தி:பாபி