உத்திரமேரூர் அருகே திமுக பிரமுகரை படுகொலை மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் கிராம திமுக பிரமுகர் சண்முகம், முன்னால் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சண்முகம் நேற்றிரவு தனது இரு சக்கர வாகனத்தில் மதூரில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது மதூர் பெற்றோல் பங் அருகே மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் மற்றும் சாலவாக்கம் போலீசார் இரத்த வெள்ளத்தில் இருந்த சண்முகத்தின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகி சண்முகத்தை அதிமுக நிர்வாகி படுகொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திமுக பிரமுகர் சண்முகம் கொலை சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தும் மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்க்கு முன்பே திமுக பிரமுகர் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவி பாலாஜி