உத்திரமேரூரில் எல்ஐசி புதிய திட்டம் அறிமுக விழா.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் புதிய திட்டத்திற்க்கான அறிமுகம் மற்றும் துவக்கவிழா நடைபெற்றது.
இந்த விழாவானது உத்திரமேரூர் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் கே.மணி தலைமையிலும், வளர்ச்சி அலுவலர் கே.ஜெபராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலாளர் மணி மருத்துவ செலவுகளை ஈடு செய்யக்கூடிய மகத்தான திட்டமான ஆரோக்கிய ரக்ஷ்க் திட்டத்தின் நன்மைகள் குறித்து முகவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சியூபி வங்கியின் மேலாளர் எஸ்.செல்வகணபதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வாழ்த்தி பேசினார்.
இந்த திட்டத்தின் முதல் பாலிசியை முகவர் ஆர்.செல்வக்குமார் செலுத்தினார், முன்னதாக அனைவரையும் உதவி நிர்வாக அதிகாரி கே.நாகராஜன் வரவேற்க, கீதா ஸ்ரீதர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முகவர்கள் பேரானந்தம், கோமதி உட்பட ஏராளமான முகவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி: பாபி