உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்
இராமநாதபுரம், ஜுலை,30,
இராமநாதபுரம் மாவட்டம் சாலையோர மற்றும் தள்ளுவண்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் நடந்தது. 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர் களுக்கு தமிழகம் முழுவதும் அரசு விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதுபோல இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த பயிற்சி முகாம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜி.விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் பிரிக்சன் நிறுவன பயிற்சியாளர் விவேகானந்தன் பங்கேற்று முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இராமநாதபுரம் எம்.தர்மர், கீழக்கரை எம்.ஜெயராஜ், இராமேஸ்வரம் லிங்கவேல், கமுதி முத்துசாமி, கடலாடி வீரமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் சாலையோர மற்றும் தள்ளுவண்டி மூலம் உணவு விற்பனை செய்பவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. எம்.சோமசுந்தரம்
