உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ..மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
இராமநாதபுரம், ஆக,23,
உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் சார்பில் அதன் 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் அடங்கிய வட்டார மாநாடுவட்டார தலைவரும் பட்டயத் தலைவருமான ஆர்.வி. என்ற ஆர்.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி கடற்கரை ரிசார்ட்டில் நடந்த இந்த நிகழ்வில் சர்வதேச அரிமா சங்க முதன்மை ஆளுநர் ஜெ.கே.ஆர். முருகன் நடுவராக பங்கேற்று உச்சிப்புளி விடியல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் தலைவர் எம்.அப்துல் மாலிக் , செயலாளர் ஆர்.ரவீந்திரன், பொருளாளர் எம்.பாதராமன் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து புதிய பொறுப்புகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என விளக்கி பேசினார். மேலும் நிகழ்வில் கூட்டு மாவட்ட முதல் துணை நிலை ஆளுநர் என்.கே.விஸ்வநாதன், இரண்டாம் துணை நிலை ஆளுநர் பிரான்சிஸ் ரவி, இராமநாதபுரம் அரிமா சங்க பட்டய தலைவர் அபர்ணா ஆர்.வெங்கடேசன், ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
லியோ சங்க மாவட்ட தலைவரும் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான எ.வி.சதீஸ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிங்டாம் மண்டல பட்டய தலைவர் கே.ராஜ்குமார் நிகழ்வில் கவனிப்பு உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உச்சிப்புளி பகுதியில்வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 


மேலும் நிகழ்வில் பி.அய்யாத்துரை, சீனிவாசன், விவேகானந்தன், எம்.இளமுருகு, அப்துல்லா, வி.கே.எம்.செல்வகுமார், கே.எஸ்.ராஜ்குமார், முருகானந்தம், அனுராஜ், உச்சிப்புளி விடியல் அரிமா சங்க நிர்வாக குழு இயக்குனர்கள் டிஜிஎஸ் ஜானகிராமன், அப்துல் ரஹீம், செல்வம், முகமது ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், தர்மராஜ், ஹபீப், உள்ளிட்டோரும் இராமநாதபுரம் எஸ்.ஏ.ஜி. மணிகண்டன் உள்ளிட்ட இராமநாதபுரம் அரிமா சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

விழாவில் வழக்கறிஞர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உச்சிப்புளி விடியல் அரிமா சங்க புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். ஏற்பாடுகளை ஆர்.வி.என்ற ஆர்.விஸ்வநாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
எம்.சோமசுந்தரம்