இ.யூ.முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து
திருச்சி,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம்.அப்துர் ரஹ்மான் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளிய்ட்டுள்ள அரசாணையில் கூறியதாவது : ஹஜ் கமிட்டி ஆக்ட் 18 (1) (5 )2002 சென்ட்றல் வக்ஃப் ஆக்ட் 35 ஆஃப் 2002 – 15. 6. 2020 இன் படி தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராக அன்றைய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முஹம்மது ஜான் நியமிக் கப்பட்டிருந்தார். அவர் 2021 மார்ச் 23 அன்று மரணமடைந்துவிட்டார். எனவே மேற்குறிப்பிடப்ட்ட மத்திய-மாநில ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி இன்றைய தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் எம் அப்துல் ரஹ்மான் வக்ஃப் சட்டம் 14 ஆஃப்1995 இன் படி தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராக தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹஜ் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், தமிழ்நாடு வக்ஃப் வாரிய செயல் அலுவலர் பரிதா பானு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.