இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் கொரோனா வைரஸ் காரணமில்லை, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேட்டி
ஶ்ரீலங்கா,
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் கொரோனா வைரஸ் காரணமில்லை என்று அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையே பொருளாதார நெருக்கடிக்குக்காரணம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி கூறுகையில்; அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு முன்னர் நாட்டுக்குக் கிடைத்துவந்த வருமானம் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குறைவடைந்துள்ளதாகவும், பாரியளவில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கும் வர்த்தகர்களின் கோரிக்கை ஏற்ப “வற்” வரியை அரசாங்கம் குறைத்தமையே அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் குறைவதற்கான காரணம்.

கடன் செலுத்தும் நிதியைத் தவிர ஏனைய செலவுகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திடம் வருமானம் இருந்ததாகவும் தெரிவித்தார். வரியைக் குறைக்க வேண்டுமென மக்கள் ஒருபோதும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை. பணம் அச்சிடப்பட்டதால் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 72 கோடி டொலர்களை வழங்கியுள்ளது. கொரோனா பணிகளுக்கு இதனை செலவு செய்துவிட்டு பணம் மிஞ்சுமாக இருந்தால் அதனை வேறு செயற்பாடுகளுக்கு செலவிட முடியும்.
இலங்கையில் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நிய செலாவணி போதியளவில் கிடைக்காமையே காரணம். இதற்கு சில நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்து எனவும் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.