இராமேஸ்வரத்தில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் நிவாரண உதவி
இராமநாதபுரம்,ஜுலை,4.
இராமேஸ்வரத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தவிக்கும் நலிவுற்ற குடும்பத்தினருக்கு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதுபோல கடந்த வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கும் மன நலம் குன்றிய சிறுவர்கள் இல்லத்திற்கும் நேரடியாக சென்று நிவாரண பொருட்களான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜாபர், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசகர் பால் பேட்ரிக், ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் அருளானந்து, ஐசிடிஎம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்திய பிரியா, களப்பணி ஒருங்கிணைப்பாளர் சாந்த மலர் ஆகியோர் பங்கேற்றனர். எம்.சோமசுந்தரம்