இராமநாதபுர மாவட்ட கலெக்டர் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கையாக தனுஷ்கோடியில் ஆய்வு!தொண்டி,ஜுலை.25,
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடி 1964-ம் ஆண்டு நள்ளிரவில் ஆழி பேரலை புயலில் மண்ணால் மூழ்கி போனது. தற்போது அதன் அடையாளமாக தேவாலயமும், சில கட்டிடங்களுமே இடிந்த நிலையில் உள்ளது.
இராமேஸ்வரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ் கோடியானது ஒரு காலத்தில் இலங்கை நாட்டுடன் கடல் வாணிபம் புரிய சிறந்த துறைமுகமாக விளங்கியது. மண்ணால் மூழ்கி போன பின் இலங்கையுடனான கப்பல் போக்குவரத்து, சென்னையிலிருந்து இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தனுஷ்கோடி பகுதியை இராமநாதபுர மாவட்ட கலெக்டர் சந்திரகலா சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக குந்துக்கால் பகுதி, ஓலைக் குடா, பாம்பன் அருகே மண்டபம் பேரூராட்சி பூங்கா ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.
செய்தியாளர் நம்புதாளை வாசு.ஜெயந்தன்