இராமநாதபுர மாவட்டத்தில் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் பேரிகாட் அமைக்க வளைகுடா வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை
இராமநாதபுரம்,ஜூலை.12,
தொண்டி, நம்புதாளை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கிறது.அதே போல்இராமேஸ்வரம், ஏர்வாடி பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணி,நாகூர் ஆகிய பகுதிகளுக்கும் இவ்வழியாக சுற்றுலா வாகனங்கள் முதல் கடல் உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் பயணிக்கிறது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாகவும்,குறுகிய சாலை வளைவாகவும் மேலும் தமிழ் நாடு கிராம வங்கி செயல்படும் இடமாக,மேற்கு பள்ளி,அரபி கல்லூரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் பேரிகாட் எனப்படும் தடுப்புக் கம்பியை முன்பு திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், தொண்டி காவல்துறை அனுமதியோடு வைக்கப்பட்டது. தற்போது கொரோனா காலகட்டம் முடிந்தும், அந்த தடுப்பு கம்பி சாலையின் ஓரமாக கிடத்தப்பட்டது.இதை அறிந்து இப்பகுதியை சேர்ந்த வளைகுடா வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரான நம்புதாளை பாரிஸ், மற்றும் சமூல நலஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் விபத்து அடிக்கடி நடைபெறும் அப்பகுதியில் பேரிகாட் வைக்கப்பட்டது. ஆனால் சிலர் இரவோடு இரவாக சில சமூக நலனில் அக்கறையில்லாமல் அதை அகற்றி மீண்டும் சாலையின் ஓரமாக போட்டுள்ளனர்.
அந்த இடத்தில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டு சுமார் ஐந்து உயிர்கள் பலியாகி, பலர் காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளதால் மீண்டும் தடுப்பு கம்பியை அதே இடத்தில் அமைக்கவும், மேலும் இது போல் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் பேரிகாட் அமைத்து விபத்துநடப்பதை தடுக்க இப்பகுதி மக்கள் சார்பாக வளைகுடா வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் நிறுவனர் நம்புதாளை பாரிஸ்,பொது செயலாளர் வாசு ஜெயந்தன் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்