இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா – முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பங்கேற்றார்.
இராமநாதபுரம், ஜுலை,15,
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பங்கேற்று காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் ஜுலை 15 ந்தேதி காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரதிமாலா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளியில் புதிய மாணவ, மாணவியர் முதல் வகுப்பில் 80 பேர் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 100 பேர் சேர்ந்துள்ளனர். ஐந்தாம் வகுப்பில் 101 வது மாணவராக இன்று பள்ளியில் சேர்ந்த மாணவனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்தார். மேலும் பள்ளியில் இதுவரை சேர்ந்த புதிய மாணவர்கள் உட்பட 752 பேர் உள்ளதாக தெரிவித்த முதன்மை கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் சேர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயா, உஷாராணி, பள்ளி துணை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி , பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமேஸ்வரி, ஆசிரியர்கள் எஸ்.பாமா, ஆர்.விஜயகுமாரி, டி.மேகலா, டி.மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.சோமசுந்தரம்