இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம், ஜுலை, 8-
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார தலைவர் எஸ்.கோபால் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிநகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை ஏற்றி வரும் மத்திய அரசை கண்டித்து ஜுலை 8 ந்தேதி பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தி அங்கு வருபவர்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் மற்றும் ஒவ்வொரு தொகுதி தலைநகரங்களிலும் வரும் 12-ம் தேதி சைக்கிள் பேரணி நடத்தும் போராட்டம், மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் தவறான கொள்கைகள், எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி சென்னையில் பேரணி என மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளார்.
அதனையொட்டி இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரதிநகர் பகுதியில் நடந்த முதல் கட்ட ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் எஸ்.கோபால் தலைமை வகித்தார். இராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் சித்தார்கோட்டை கமர்தீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் சேவாதள மாவட்ட தலைவர் காருகுடி சேகர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் லயன் மணிகண்டன், ஆறுமுகம், பாஸ்கரசேதுபதி, மாவட்ட துணை தலைவர்கள் காவனூர் கருப்பையா, காமராஜ், கார்மேகம், பாலகிருஷ்ணன், வட்டார விவசாய அணி தங்கராஜ், தேவிபட்டினம் அன்சாரி, பேராவூர் காளியப்பன், வாணி இப்றாகிம், துரைப்பாண்டி, நேரு, இராமச்சந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எம்.சோமசுந்தரம்.