இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து – நில அளவை தொழில்நுட்ப பிரிவு முழுவதும் எரிந்து நாசம்!
இராமநாதபுரம், ஜுலை,29,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை தொழில்நுட்ப பிரிவு வளாகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தில் நில அளவை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு உள்ள நில அளவை தொழில்நுட்ப பிரிவு அறை மின் கசிவு காரணமாக நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. நள்ளிரவில் புகை மண்டலமாக காட்சி அளித்ததை கண்ட போலீசார் தீயணைப்பு துறை க்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் நில அளவை தொழில்நுட்ப பிரிவில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் இதே கட்டிடத்தில் இயங்கி வந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எம்.சோமசுந்தரம்.