இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம்
தொண்டி, செப்.12-
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வசதியாக தொண்டியில் பஸ் நிலையம் தொடங்கி பேரூராட்சி பகுதி முழுவதும் 20 மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளாட்சி துறை வருவாய்துறை. சுகாதாரத்துறை ஆகியோர் ஈடுபட்டனர். தொண்டி பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் பொதுமக்களின் ஆதார், மொபைல் எண் போன்ற தகவல்கள் பதியப்பட்டது. அடிப்படை வசதிகளை தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அமுதன், வி.ஏ.ஓ சேக்ரட் நாத், நம்புதாளை வி.ஏ.ஓ நம்பு ராஜேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர் சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்