இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாடனை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தூரில் நகர் கூட்டம் வடக்கு கிளை பொருளாளர் அசாருதீன் தலைமை
புதுப்பட்டிணம், ஆக.28
இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாடனை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தூரில் நகர் கூட்டம் வடக்கு கிளை பொருளாளர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாடனை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி,தொகுதி செயலாளர் ரிஸ்வான், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முஜாஹிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊடக அணி தொகுதி செயலாளர் அப்ஸர் அனைவரையும் வரவேற்றார். தொகுதி தலைவர் சலாமத் அலி கட்சியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து பேசினார். தொகுதி செயலாளர் ரிஸ்வான் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்வது பற்றி விளக்கினார் சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முஜாஹிதீன் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது பற்றி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஆனந்தூர் ரியாத் மெடிக்கல் அருகில் இருக்கும் மின்கம்பியை சரி செய்ய வேண்டி மின்வாரியத்திடம்மனு அளிப்பது, ஆனந்தூரில் பசுமை திட்டத்தின்படி ஊன்றப்பட்ட மரக்கன்றுகளின் வேலிகளை பராமரிப்பது எஸ்.டி.பி.ஐ கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டது. அதே போல் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டிணம் கிளையில் மாதாந்திர கூட்டம் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் சர்ஜுன் அனைவரையும் வரவேற்றார்.
புதுப்பட்டிணத்தில் தொடர்ந்து நிலவி வரும் மின்பற்றாக்குறை சரிசெய்ய மின் வாரியத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக ஊடகப் பொறுப்பாளர் ஜியாத் நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்