இராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை – எஸ்பி கார்த்திக் எச்சரிக்கை!
ஜுலை,29-
இராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன் படி இராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் 118 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றி பொதுமக்கள் மாவட்ட தனிப்பிரிவு 8300031100, 04567-232110, 232111, 230759 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். எம்.சோமசுந்தரம்