இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
ஜுன்,8 – இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளார். இவர் தொகுதியில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலக
த்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப் பணிகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.. நகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக இராமநாதபுரம் அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலம் வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அதற்கான தொகையை தனது சொந்த நிதியில் காசோலையாக நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் விசுவநாதன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், ராமநாதபுரம் தெற்கு நகர திமுக பொறுப்பாளர் பிரவின் தங்கம், வடக்கு நகர திமுக பொறுப்பாளர் ஆர்.கே.கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம் எல் ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோரின் தீவிர கொரோனா தடுப்பு பணியால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எம்.சோமசுந்தரம்