இராமநாதபுரம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் 66 வது எல்ஐசி பிறந்த நாளை முன்னிட்டு எல்ஐசி வார விழா கொண்டாட்டம்.
இராமநாதபுரம்,செப்,2
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் இன்சூரன்ஸ் வார விழாவாக எல்ஐசியில் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்ஐசி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி அவர்களின் துணைவியார் வானதி குத்துவிளக்கு ஏற்றி இன்சூரன்ஸ் வார விழாவை துவக்கி வைத்தார். ராமேஸ்வரம் SO கிளை மேலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார். இவ்விழாவில் ராமநாதபுரம் முதுநிலை கிளை மேலாளர் லட்சுமணன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் ராமநாதபுரம் கிளை மதுரை கோட்ட அளவில் வணிகத்திலும் சேவையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழா கொண்டாடுவதால் இந்தப் பகுதி மக்களுக்கு இன்சூரன்சு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாகவும் கூறினார். ராமநாதபுரம் கிளை உதவி மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார். இவ்விழாவில் பாலிசிதாரர்கள், முகவர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விற்பனை பிரிவு தலைவர் முத்துப்பாண்டி செய்திருந்தார். எம்.சோமசுந்தரம்