இராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு மருத்துவ முகாம்…
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி மாரிமுத்து தலைமையில் நடந்தது.
இராமநாதபுரம்,செப்,30-
பேராவூர் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள மற்றும் நிலவளத்திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை மலடு நீக்க சிகிச்சை முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஏஞ்சலா கோயில்பிள்ளை முன்னிலை வகித்தார். கால்நடை வளர்ப்பு உதவி இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாரதா, கால்நடை பராமரிப்பு உதவி சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
முகாமில் சுமார் 200 மாடுகள், 50 கன்றுகள், 1010 செம்மறி ஆடுகள், 1340 ஆடுகள் 30 நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும் முகாமில் சினை பரிசோதனை, கால்நடைகள் மற்றும் கோழி இனங்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும் கால்நடைகளுக்கு தாதுஉப்பு கலவைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 120க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். எம்.சோமசுந்தரம்