இராமநாதபுரம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு 5 கிலோ அரிசி – லக்கி அரிசி மண்டி உரிமையாளர் முனியசாமி வழங்கினார்!
இராமநாதபுரம் செப்,27-
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குத்துக்கல் வலசை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
முகாமை கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் துணை ஆட்சியர் (நிலம்) ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பொதுமக்களுக்கு குத்துக்கல்வலசையில் உள்ள லக்கி அரிசி மண்டி உரிமையாளர் முனியசாமி தலா 5 கிலோ அரிசி வழங்குவதாக அறிவித்திருந்தார். 
அதன்படி புதுவயல் மலர் மாடர்ன் ரைஸ் மில்லுடன் இணைந்து தலா 5 கிலோ அரிசி வீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 215 பேருக்கு வழங்கப்பட்டது. 
இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செய்யது, மண்டல துணை வட்டாட்சியர் பழனிக்குமார், திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், எய்டு இந்தியா மேலாளர் பாஸ்கரன், முருகன், ராஜப்பிரியா, திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் அர்ஜுண கோபால், கிராம நிர்வாக அலுவலர் ஜியாவுதீன், சிகரம் வளர்ச்சி குழு செயலாளர் கே.கர்ணன், தினைக்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஸ்ரீதமிழ், முத்தரையர் சங்க நிர்வாகிகள் ஏ.வேலுச்சாமி, மேல்மட்ட குழு உறுப்பினர் வேலுச்சாமி, செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துக்கருப்பன், வைரவன் கோவில் ஆறுமுகம், குத்துக்கல்வலசை தங்கராஜ், முத்தமிழ் கல்வி அறக்கட்டளை சிவனேஸ்வரன், ராஜேந்திரன், கமல் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கிய லக்கி அரிசி மண்டி உரிமையாளர் முனியசாமி மற்றும் புதுவயல் மலர் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் ராஜன், ராமு ஆகியோரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
எம்.சோமசுந்தரம்