இராமநாதபுரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவி – மாவட்ட தலைவர் ஜெயபாலா வழங்கினார்.
இராமநாதபுரம், ஜுன்,22- இராமநாதபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபாலா ஏற்பாட்டில் நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திரைப்பட முன்னனி நடிகர் விஜய் அவர்களின் 47 வது பிறந்த நாள் உலகம் முழுவதும் உள்ள அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதுபோல அவரது பிறந்த நாளையொட்டி இராமநாதபுரத்தில் அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி என் ஆனந்த் அறிவுறுத்தலுக்கிணங்க தளபதி விஜய் மக்கள் இயக்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜெ.ஜெயபாலா ஏற்பாட்டில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சன், மாவட்ட மாணவரணி தலைவர் தமீம், முகமது இத்ரீஸ், மாவட்ட இணை செயலாளர் மஹாதீர், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் அபுல்ஹசன், இராமநாதபுரம் நகர் இளைஞரணி தலைவர் அருண், தொண்டரணி தலைவர் அமீன், உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்
சோமசுந்தரம் .