இராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் – முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்
ஜூன். 19.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அவர்களின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய 51 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை ராமநாதபுரம் அருகே உள்ள அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு இனிப்புடன் கூடிய காலை உணவு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம். தெய்வேந்திரன் தலைமையில் அன்பு இல்லத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது, காலை உணவு பரிமாறியவுடன், ராகுல் காந்தி அவர்கள் நீடூழி வாழ அனைவரும் பிரார்த்தனை செய்தனர், இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் மேகநாதன், லயன் மணிகண்டன், சமூகவலைத்தள பொறுப்பாளர் டாக்டர் கணேசமூர்த்தி, தங்கச்சிமடம் நகர் தலைவர் முத்துவேல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.சோமசுந்தரம்.