இராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன போராட்டம்.
மத்திய அரசின் தவறான நிர்வாக கொள்கையினால் ஏறிவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சூடம் காண்பித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் தவறான நிர்வாக கொள்கையினால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதைக் கண்டித்து ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி தலைமையில், மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் நூதன முறையில் எரிவாயு சிலிண்டருக்கு சூடம் ஏற்றி, ஆர்ப்பாட்டம் செய்து, சைக்கிள் பேரணி அரண்மனை முன்பு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் பினுலால் சிங், கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசினுடைய கடுமையான அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு பின்னர், சைக்கிள் பேரணி நடைபெற்றது,
\
அரண்மனை வாசலில் இருந்து கிளம்பிய பேரணி மத்திய கொடிக்கம்பம், விவேகானந்தர் சாலை போன்ற முக்கிய வீதிகள் வழியாக சென்று கேணிக்கரையில் முடிவடைந்தது, இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி துணை தலைவருமான வேலுச்சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.கோபால், துல்கிப் , மற்றும் வட்டார தலைவர் காருகுடி சேகர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் லயன்.மணிகண்டன், மோதிலால் நேரு, பாலகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கௌசி மகாலிங்கம், வாணி இப்ராஹிம், காவனூர் கருப்பையா, உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்,
சோமசுந்தரம்.