இராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம் நகர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நகர் செயலாளர் பிரைட் மாரிமுத்து தலைமையில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாற்று எரிபொருளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் பிரைட் மாரிமுத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் பாஸ்கரன் (கிழக்கு), தேவராஜ் (மேற்கு) , முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பி.ஜி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஹயாத், மாவட்ட மகளிரணி செயலாளர் பிரியா பெரியகருப்பன், நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் மதிகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நிவாஸ் சங்கர், நற்பணி இயக்க ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், ராஜபாண்டியன், மண்டபம் தயூப் முகமது, இராமேஸ்வரம் நகர் செயலாளர் தர்மா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெய்கணேஷ், மற்றும் சாகுல் ஹமீது, முகவை பாலா, கமல் ஜான் ,கமுதி கண்ணன், இளங்கோ, முதுகுளத்தூர் பூமிநாதன், திருவாடானை ஜெகநாதன், ராஜா ,பெரியபட்டினம் சகுபர் சாதிக் ,அசிஸ் கான், ஏர்வாடி ஹமீது ,எம் ஜி முருகேசன் (யோகா மாஸ்டர்) , மணி, ராமேஸ்வரம் ராமகிருஷ்ணன், சுப்பிரமணி, சக்தி ரமேஷ் ,சேகர் ,கீழக்கரை அறிவழகன், ஆர்எஸ் மடை பழனி ,மண்டபம் ஜமால் ,முனீஸ்வரன்,ஆரோக்கியதாஸ், சுந்தரபாண்டியன், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோமசுந்தரம்