இராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம்
திருவாடானை, ஆக.30,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்ட மற்றும் படைப்பரங்கம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கிளையின் தலைவர் ஆசிரியர் முரளி மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முனீஸ்பிருந்தா, முகமது ரிஸ்வான் ஆகியோர் கவிதை வாசித்தனர். கஸ்தூரிராஜா, சக்திவேல், ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆகியோர் கதைகள் சொன்னார்கள். முத் இயக்குனர் ராம் இயக்கிய கற்றதுதமிழ், தங்க மீன்கள், பேரன்பு படங்களைப்பற்றிய விமர்சனத்தை முத்துராஜா கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்க அமைப்பு மற்றும்விதிகள் பற்றிய அவசியத்தை கலையரசன் கூறினார். மேலும் இன்றைய சூழலில் நாம் செய்யவேண்டியது குறித்தும் கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை, கதை, சினிமா பற்றி கலந்துரையாடிய கல்லூரி மாணவர்களை மாவட்ட செயலாளர் டாக்டர் வான்தமிழ் பேசினார்.நிகழ்ச்சியை கிளையின் செயலாளர் பேரா.வா.ஸ்டாலின் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சங்கவி நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்