இராமநாதபுரத்தில் தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
இராமநாதபுரம், ஜுலை,11,
தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில பொருளாளர் தங்க.செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் கணிக வரைவாளர் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் சண்முகநாதபாண்டியன் வரவேற்று பேசினார்.

தேர்வுத்துறை உதவி இயக்குநர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் (இலக்கியம்) கல்பத்னாராய்,TNGOU மாவட்ட தலைவர் சாந்தகுமார், இராமநாதபுரம் நில அளவை ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜகோபால், பெரம்பலூர் ஆய்வாளர் சண்முகம், மாநில துணை தலைவர்கள் மாரியப்பன், காயத்ரி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். வட்ட துணை ஆய்வாளர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில்
நில அளவைத் துறையில் உள்ள 8000 காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், நில அளவை ஆய்வாளருக்கு பட்டா வழங்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலாளர் மாரிச்செல்வம் நன்றி கூறினார். எம்.சோமசுந்தரம்.