இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழா – மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது….
இராமநாதபுரம் அக். 02.
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்திஜியின் பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்திஜியின் 153 வது பிறந்தநாள் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அரண்மனை முன்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த காந்திஜி மற்றும் காமராஜர் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலக வாயிலில் உள்ள காந்திஜி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அருகாமையில் உள்ள நாடார் தெருவில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதில் இராமநாதபுரம் வட்டார தலைவர் காருகுடி சேகர், மாவட்ட துணை தலைவர்கள் சித்தார் கோட்டை துல்கீப்கான், எஸ்.கோபால், முத்துகிருஷ்ணன், காவனூர் கருப்பையா, மாவட்ட பொதுச்செயலாளர் லயன் மணிகண்டன், பாலகிருஷ்ணன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயரூபன், 
மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், செய்தி தொடர்பாளர் கௌசி மகாலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், நகர் துணை தலைவர் ஜெயக்குமார், நகர் பொருளாளர் சகுபர் சாதிக், அழகர், உட்பட மாவட்ட, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நகர் தலைவர் டிஎம்எஸ்.கோபி செய்திருந்தார்.
எம்.சோமசுந்தரம்