இராமநாதபுரத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 72 வது ஜெனிவா ஒப்பந்த தினம்…
ஆக,13- இராமநாதபுரத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் YRC, JRC, GRC அமைப்பினர் பங்கேற்ற 72 வது ஜெனிவா ஒப்பந்த தினம் கொண்டாடப்பட்டது.
இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்வில் மண்டபம் ஜெஆர்சி கன்வீனர் எம்.பாலமுருகன் வரவேற்று பேசினார். முஹம்மது சதக் தஸ்தகிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.சோமசுந்தரம் தலைமையுரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் சி.குணசேகரன் முன்னிலை வகித்தார். பரமக்குடி ஜேஆர்சி கன்வீனர் எஸ்.அலெக்ஸ், ஒய்ஆர்சி மாவட்ட அமைப்பாளர் ஏ.வள்ளிவிநாயகம், இராமநாதபுரம் பசுமை ரெட் கிராஸ் ஏ.மலைக்கண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.ஜெபசிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புரவலர் டாக்டர் எம்.உலகராஜ், ஏவிஎம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எம்.ரமேஸ் நன்றி கூறினார். எம்.சோமசுந்தரம்.