இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர கோரிக்கை.
ஜுன்,5-
இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் தாலுகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கொரானா நோய் சிகிச்சை பெறுவதற்காக பல கிலோமீட்டர் மற்றும் பல மணி நேரம் பயணம் செய்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு செல்கின்றனர். எனவே அலைச்சலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் நலன் காக்கவும் இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானோ சிகிச்சை மையம் அமைத்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் பாதுஷா, நூருல் அமீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர் இதுகுறித்து இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . இதுதொடர்பாக இளைஞர் மஸ்ஜித் சேவை குழு மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சோமசுந்தரம்