இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மறைவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
திருச்சி,
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஆகியோர் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஆகியோர் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்த வீரபத்ர சிங் 9 முறை எம்எல்ஏ.,வாகவும், 5 முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். வீரபத்ர சிங், கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிம்லாவில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 87. அவருக்கு சிகிச்சையளித்து வந்த இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜனக் கூறுகையில், அவர் ஏபர்ல் 30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்களது மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது என்றார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், வீர்பத்ர சிங் நீண்ட அரசியல் பயணம் கொண்டவர். சட்டமன்ற அனுபவம் மற்றும் நிர்வாக திறன் வாய்ந்தவர். இமாசல பிரதேசத்திற்கு முக்கிய பங்காற்றிய அவர் மக்களுக்காக பணி யாற்றியுள்ளார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதர வாளர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதேபோன்று, வீர்பத்ர சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் மறைவுக்கு முத்லவர் ஜெய் ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை முதல்வராகவும் இருந்தவர் வீரபத்ர சிங். மாநிலத்ில் 1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5-ம் தேதிவரை முதல்வராகவும், 1993 முதல் 1998, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017ம் ஆண்டுவரை வீரபத்ர சிங் முதல்வராக இருந்துள்ளார்.
கடந்த 1998 முதல் 2003ம் ஆண்டு வரை மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் வீரபத்ர சிங் இருந்துள்ளார். தற்போது சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாகவும் வீரபத்ர சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
வீரபத்ரசிங்கிற்கு பிரதிபா சிங் என்ற மனைவியும், விக்ரமாதித்யா சிங் என்ற மகனும் உள்ளனர். பிரதிபா சிங் முன்னாள் எம்.பி., விக்ரமாத்தியா சிங், சிம்லா ஊரக தொகுதி எம்எல்ஏ வாக உள்ளார். எம்.கே. ஷாகுல் ஹமீது