இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 18/06/2021
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.மத்தேயு 7:24.
இயேசுவின் வார்த்தைகளைக்கேட்டு அதன்படி செய்கிறவனையே கன்மலையின்மேல் வீட்டைக்கட்டினவனுக்கு ஒப்பிடுகிறார். அவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்யாதவனை மணலின்மேல் வீட்டைக்கட்டினவனுக்கு ஒப்பிடுகிறார்.
கன்மலை என்பது கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்வதையே குறிக்கிறது. செய்யாமலிருப்பது மணலின்மேல் கட்டப்பட்டதற்கு ஒப்பாயிருக்கிறது.
அறிக்கை:
அவருடைய வார்த்தை என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுயிருக்கிறது. நான் அதைக்கேட்டு அதனபடி நடப்பேன். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com