இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 17/06/2021
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22.
கள்ளத்தீர்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு சொன்னார். புதிய ஏற்பாட்டு சபைக்கு தேவன் தமது பிள்ளைகளிடம் தாமே நேரடியாகப் பேசுகிறார். பழைய ஏற்பாட்டில் அவ்வப்போது ஒரு சிலர் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்க அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னாரகள். ஜனங்களும் அவர்களைத் தேடிச்சென்று விசாரிப்பது வழக்கம். பழைய ஏற்பாட்டு நாட்களில் எல்லோருக்குள்ளும் பரிசுத்தாவியானவர் இல்லை. ஆகையினால் பரிசுத்தாவியினால் தீர்க்கதரிசனங்களை அவர்கள் சொல்ல வேண்டியதாயிருந்தது. புதிய ஏற்பாட்டு சபைக்கு அது தேவையில்லை. ( 1 சாமுவேல் 9:9. முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.) ஆனால் புதிய ஏற்பாட்டில் நம் எல்லோரோடும் கூட என்றென்றைக்கும் இருக்கும்படிக்கு தந்தருளப்பட்ட தேற்றறவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் தேவன் தமது பிள்ளைகளிடத்தில் தாமே முதலில் பேசுகிறார். ……..தொடரும்
அறிக்கை
அவரால் பெற்ற அபிஷகம் எனக்குள் நிலைத்திருக்கிறது. அந்த அபிஷேகம் சகலவற்றையும் குறித்து எனக்கு போதிக்கும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com