இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 15/06/2021
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22.
தீர்க்கதரிசனம் நிறைவேறினாலும், சொன்னது நடந்தாலும் அதை உடனே ஏற்றுக்கொள்ளாமல் மற்ற படிகள் மூலம் அத்தீர்க்கதரிசத்தைக் கவனிக்கவேண்டும். உபாகமம் 13:2 ம் வசனத்தில் அந்த தீர்க்கதரிசி சொன்ன அடையாளமும் அதிசயமும் நடந்தாலும் அதை நம்பாதிருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறினாலும் அது வேதவசனத்திற்கு ஒத்ததாகவும்; தேவ சித்தத்தைமட்டும் வெளிப்படுத்துகிறதாகவும் இருக்கவேண்டும். ஆகவே சொல்லப்பட்ட காரியம் வேதவசனத்திற்கு ஒத்தாக இருக்கிறதா? நிறைவேறுகிற காரியம் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகறதா? என்பதைப்பார்க்க வேண்டும். ……..தொடரும்
அறிக்கை:
அவரால் பெற்ற அபிஷகம் எனக்குள் நிலைத்திருக்கிறது. அந்த அபிஷேகம் சகலவற்றையும் குறித்து எனக்கு போதிக்கும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com