இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை- 08/06/2021
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். மத்தேயு 7:12
மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அதை மற்றவர்களுக்கு நீங்கள் முதலாவது செய்யவேண்டும். மற்றவர்கள் உங்களை நேசிக்கவேண்டும் என்று விரும்பினால்; முதலில் அவர்களை நீங்கள் நேசியுங்கள். அன்பை அவர்களில் நீங்கள் விதைக்கும்போது விதைத்ததைவிட அதிகமாகவே அறுவடை செய்வீர்கள். இதுதான் இராஜரீக சட்டம். யாக்கோபு 2:8 ல் உன்னிடத்தில் நீ அன்புகூறுகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக. என்று வேதவாக்கியம் சொல்லுகிற இராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள் என்று கூறுகிறது. மற்றவர்கள் உங்களை மதிக்கவேண்டும் என்று விரும்புவீர்கள் என்றால் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். இது ஒரு சட்டமும் விதியுமாகும். நீங்கள் எதை செய்கிறீர்களோ அதைப்பெற்றுக்கொள்வீர்கள்.
அறிக்கை:
யாக்கோபு 2:8 ன் இராஜரீக சட்டப்படி தெய்வீக அன்பு என் இருதயத்தில் ஊற்றப்பட்டிருப்தால் நான் என்னை நேசிக்கிறது போல மற்றவர்களிடத்திலும் அன்பு கூறுவேன். இதை செய்வதற்கான தெய்வீக அன்பு என் இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com