இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை 05/06/2021
பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்கலாள் அவைகளை மிதித்து, திருப்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மத்தேயு 7:6
“முத்து” என்பது வேதவசனத்தின் வெளிப்படுத்துதலைக் குறிக்கிறது. பன்றிகள் என்பது யூதர்களில் அவிசுவாசிகளைக்குறிக்கிறது. நாய்கள் என்பது புறஜாதிகளில் அவிசுவாசிகளைக்குறிக்கிறது. முத்து சிப்பிக்குள் இருப்பதுப் போல வேதத்தின் வெளிப்பாடுகள் இரகசியமாய் இருப்பதனால் அது முத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது
கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களது தகுதிக்கு ஏற்பவே (புரிந்துகொள்ளுதல்) பகிர்ந்து கொள்ள வேண்டும். வெளிப்பாடு கிடைத்த உடன் அவற்றைப் போய் எல்லாரிடத்திலும் கூறுவது ஆபத்தானது. முக்கியமாக அவிசுவாசிகளிடம் இந்த வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளுதல் கூடாது.
அவிசுவாசிகளுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரே வெளிப்பாடு அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற செய்தி மாத்திரமே.
அறிக்கை:
அவனவனுக்கு இன்னின்படி உத்தரவு சொல்லும்படிக்கு நான் பேசும் என்வார்த்தைகள் கர்த்தருடைய வசனமாகிய உப்பால் சாரம் ஏறினதாய் இருக்கும்படி கர்த்தருடைய வார்த்தையை நான் நேசித்து தியானிப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com