இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை 04/06/2021
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2
கர்த்தர் கொடுக்கும் பாரம் இலேசானதாய் இருக்க அது எப்படி பாரமானதாக மாறும்?. ஒரு சகோதரன் தேவனுடைய ஐக்கியத்தில் இருந்து விடுபடும்போது “ஆவிக்குறிய மூட்டு பாரம்” உண்டாகிறது. நாம் எளிதாக பேனாவை கரங்களில் பிடித்து எழுதுகிறோம். ஆனால் மூட்டுவாதம் வந்த உடன் எளிதாக முன்போல் பேனாவை பிடித்து எழுத முடிவதில்லை.. ஆவிக்குறிய மூட்டுவாதம் வந்தவர்களுக்கு அவர்களுடைய பாரம் பளுவாகிவிடுகிறது. அப்பொழுது ஆவிக்குறியவர்கள் போய் அவர்களை சரிசெய்யவேண்டும்.
அவர்களது பாவத்தை அறிக்கையிடச்செய்து, தேவனுடன் அவர்களை ஐக்கியம் கொள்ளச் செய்து, அவர்களது பாரத்தை இலகுவாக்கிவிட வேண்டும். மற்றவர்கள் பாரத்தோடு இருக்கும்போது அவர்களுக்கு உதவிசெய்து; அவர்களே அதை சுமக்கக்கூடிய, அதை நிறைவேற்றக்கூடிய பெலன் வரும்வரை உதவிவிட்டு நாம் வெளியே வந்து வுpடவேண்டும்.
அறிக்கை:
கர்த்தருடய கற்பனைகள் இலகுவானவை. நான் கர்த்தருடைய கற்பனைகளின்படி நடப்பேன். ஆவிக்குறிய மூட்டு பாரம் உள்ளவர்களுக்கு அவர்களது பாரம் நீங்க நான் சாந்தத்தோடு உதவி செய்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com