இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 02/06/2021
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. கலாத்தியர் 6:1.
சகோதரரை சீர்ப்பொருந்தப் பண்ணும்போது சாந்தத்தோடே செய்யவேண்டும். சாந்த குணம் என்பதற்கு “கற்றுக்கொள்ளும் மனப்பாண்மை” என்று அர்த்தம். பாவத்தில் இருந்து ஒருவரை சீர்ப்பொருந்தப் பண்ணும்போது நீங்கள் கற்றுக்கொள்ளும் மனப்பாண்மையோடு அதைச் செய்யவேண்டும். அவரைச் சீர்ப்பொருந்தப் பண்ணும்போது அவர் எப்படி அந்த தவறில் வழுந்தார்; அவர் எப்படி வெளியே வருகின்றார் என்பதை நீங்கள் கற்றுக்கொள்வதே உங்கள் ஆவிக்குறிய ஜீவியத்திற்கும் பாதுகாப்பிற்கும் அவசியமாகிறது. கற்றுக்கொள்ளும் மனப்பாண்மையோடு பாவத்தில் விழுந்தவர்களைச் சீர்ப்பொருந்தப் பண்ணுவோம் என்றால் நாம் பெருமைக்குள் விழாதவாறு நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். மற்றவர்களை நீங்கள் சீர்ப்பொருந்தப் பண்ணும்போது உங்களை நீங்கள் நிதானித்தும் சுயப்பரிசோதனை செய்தும் அறிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களை நீங்கள் சீர்ப்பொருந்தப் பண்ணும்போது பெருமை வந்துவிட வாய்ப்பு உண்டு. நீங்கள் பெருமையின் என்னத்தோடே ஒருவரை சீர்ப்பொருந்தப் பண்ணும்போது நீங்கள் ஏதோ பெரியவர் என்றும் பாவத்தில் விழுந்தவர்களை தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணுகிறீர்கள் இவ்வாறு நீங்கள் எண்ணும் பொழுது தவறு செய்தவர்களை நியாயம் தீர்க்கிறீர்கள். நீங்கள் தவறுசெய்தவர்களை தாழ்ந்தவர்கள் என்று நியாயம் தீர்ப்பதால் உங்கள் கண்களில் உத்திரத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். தவறு செய்தவரின் பாவம் துரும்பாகிவிடுகிறது. அவரை நியாயம் தீர்க்கும்பொழுது உங்கள் கண்களில் உத்திரம் உண்டாகிவிடுகிறது.
மற்றவர்களை சீர்ப்பொருந்தப்பண்ணும்பொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய விதி “ இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார் என்று சொல்லப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளே.
அறிக்கை:
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லும்படிக்கு நான் அருளும் என் வார்த்தைகள் கர்த்தருடைய வசனமாகிய உப்பால் சாரம் ஏறினதாயிருக்கும்படி கர்த்தருடைய வசனத்தை நான் நேசித்து அதை தியானிப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com