இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 05/10/2021
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். சங்கீதம் 90:12
முக்கியத்துவங்கள் தீர்மானிக்கும்பொழுது சில சமயங்களில் நல்ல காரியங்களைக்கூட செய்யாமல் இருக்க வேண்டியதாயிருக்கும். விருந்தினருக்கு உணவு சமைப்பது என்பது ஒரு தவறான காரியம் அல்ல. ஆனாலும் மரியாள் இயேசுகிறிஸ்துவின் பாராட்டுதலைப் பெற்றாள். இயேசுவுக்கு பணிவிடை செய்ய; வேலையாயிருந்த மார்த்தாள் கடிந்துகொள்ளப்பட்டாள். பொழுதுபோக்குகள், நன்மையான காரியங்கள் இவை கூட முக்கியமான இடத்தை உங்கள் வாழ்க்கையில் பெற்றுவிடக்கூடாது. கிறிஸ்துவுக்கும், அவருடைய வார்த்தைக்குமே முதலிடம்.
அறிக்கை: தேவன் என்னைக்கொண்டு எதை செய்யச் சித்தம் கொண்டுள்ளாரோ அதற்கே என் வாழ்நாளில் முக்கியத்துவம் கொடுப்பேன். என் வாழ்நாட்களை ஜாக்கிரதையாய் செலவழிப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com