இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 03/10/2021
தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். நீதிமொழிகள் 18:9
நான்கு விதங்களில் நாம் நேரத்தை வீணடிக்கிறோம்.
1 ஒன்றுமே செய்யாமல் இருப்பது
2 பிரயோஜனமில்லாததை செய்வது
3 நமக்கு அவசியமில்லாத மற்றவர்களுடைய காரியத்தில் தலையிடுவது
4 தன்னையே அழிக்கக்கூடிய காரயத்தில் ஈடுபட்டும் நேரத்தை நாம் வீணடிக்கிறோம். சோம்பேறித்தனம் என்பது வழக்கமாகிவிடக்கூடிய ஒரு குணாதிசயம். மதுபானத்தை கொஞ்சம் அருந்தவதால் அது மேலும் மேலும் நம்மை குடிக்கவைக்கும். அதேப்போல சோம்பேறித்தனமும் நமக்கு வந்துவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக்கொண்டே போகும்.
தேவன் நீங்கள் செய்வதை வாய்க்கச்செய்வார் என்று வேதம் கூறுகிறது. சோம்பேறியோ ஒன்றுமே செய்யாமல் ஏதாவது வாய்க்குமா என்று எதிர்பார்க்கிறான். வாய்க்கச் செய்வது தேவனுடைய கடமை. வேலைசெய்வது நம்முடைய கடமை.
அறிக்கை: தேவன் எனக்க்கொடுத்த நாட்களை ஜாக்கிரதையாய் செலவழிப்பேன். நான் செய்வது யாவையும் கர்த்தர் எனக்கு வாய்க்கப்பண்ணுவார். நான் அவரது வேதத்தில் பிரியமாயிருப்பதால் அவர் என்னிடத்தில் பிரியமாயிருப்பார். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com